உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்

மட்டு.நெடியமடு கிராமத்தில் யானைகள் அட்டகாசம்

மட்டு. வவுணதீவு- நெடியமடு கிராமத்தில் நுளைந்த காட்டுயானைகள் விவசாயி ஒருவரின் தென்னந் தோப்பினை அழித்துள்ளது.

மட்டக்கப்பு வவுணதீவு நெடியமடு கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவரின் தென்னந்தோப்பினை காட்டுயானைகள் சனிக்கிழமை (27) அதிகாலை துவசம் செய்துள்ளது.

சனிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் கிராமத்திற்குள் அமைந்துள்ள குறித்த விவசாயியின் தோட்டத்தினுள் சில காட்டுயானைகள் நுழைந்து அங்குள்ள ஒன்பது தென்னை மரங்களை அழித்துள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

காட்டுயானைகளின் இவ்வாறான அழிவினால் எமது வாழ்வாதாரம் தொடர்ச்சியாக பாதிக்கப்படு வருவதாக இவ்விவசாயிகள் கூறுகின்றனர்.

இக்கிராம மக்கள் அன்றாடம் காட்டு யானைகளின் தொல்லையால் தமது குழந்தைகளுடன் இரவில் தூக்கமின்றி அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

இப்பிரதேசத்தில் யானை பாதுகாப்பு வேலியில் மின்சாரம் இல்லாமல் உடைந்து சேதமடைந்துள்ள காரணத்தால் காட்டுயானைகள் தங்கு தடையின்றி தமது தோட்டத்திற்குள் இறங்கி தென்னைமரங்கள், வாழைமரங்கள், மற்றும் தோட்டங்களையும் அழித்துவிட்டுச் செல்கின்றன.

இதனை பொறுப்புமிக்க அதிகாரிகள் பாராமுகமாக இருப்பதாகஅப்பகுதி விவசாயிகள் மேலும் கவலை தெரிவிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க