உள்நாட்டு செய்திகள்புதியவை

‘போதிய ஆதாரம் இன்மையால் ஸஹ்ரான் கைது செய்யப்படவில்லை’

சஹ்ரான் தொடர்பாக சட்டமா அதிபருக்கு காவல்துறை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் முழுமையான தகவல்களை சமர்பிக்கமாயினால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லையென சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி சட்டத்தரணி அப்துல் அசிஸ் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) சாட்சியம் வழங்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சஹ்ரான் தொடர்பாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் 2 கடிதங்களை அனுப்பினார்.

அதில் தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பு இணையம் மூலமாக அடிப்படைவாதத்தை பரப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது,எனவும் அதனை தடுக்கவும். அவர்களை கைது செய்யவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் அதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லாமையால் இதற்கு நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது என்றும் அவர் குறிப்பிட்டார்.

2018ஆம் ஆண்டில் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட போது, பயங்கரவாதத்துடன் தொடர்பு பட்டவர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் அவற்றில் எந்த குறிப்பும் இல்லை

இரண்டாவது கடிதத்தில் , பயங்கரவாத விசாரணை பிரிவினர் முதல் கடிதத்தில் அனுப்பப்பட்ட ஆவணங்களை மொழிபெயர்த்துள்ளனர்.

நாங்கள் அவர்களை ஆலோசனைக்கு அழைத்தோம். இரண்டு அதிகாரிகள் கலந்து கொண்டனர், மேலும் முழுமையான விண்ணப்பத்தை தாக்கல் செய்ய திணைக்களம் அவர்களுக்கு அறிவுறுத்தியது என குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு ICCPR இன் கீழ் நாட்டில் குழப்பத்தை உருவாக்க முயற்சிக்கும் நபர்களை கைது செய்ய முடியுமென்றும் இது போன்ற செயற்பாட்டில் சஹரானன் ஈடுபட்டுள்ள போதும் ஆதாரங்கள் இன்மையால் அவரை கைது செய்யவில்லையென அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற தெரிவுக்குழு விசாரணைகளில் சட்டமா அதிபர் சாட்சியம் வழங்குவது குறித்த சிக்கல்களை அவர் தெரிவித்த நிலையில் அவரது சார்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன மற்றும் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி அப்துல் மாலிஸ் அஸீஸ் ஆகியோர் தெரிவுக்குழுவில் முன்னிலையாகியிருந்தனர்.

கருத்து தெரிவிக்க