உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

‘ஏக்கிய ராஜ்ஜியவை’ சிங்கள மக்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்’

அரசியலமைப்பில் ஏக்கிய ராஜ்ஜிய என்ற சொல்லை சிங்கள மக்கள் தவறாக அர்த்தம் கொண்டிருக்கின்றனர், இதன் மூலம் நாடு பிளவுபடும் என்ற எண்ணப்பாட்டில் இருந்து சிங்கள மக்கள் மீளவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

புதிய அரசியலமைப்பு வரைபில் செனட் சபை மேல் சபை போன்ற கட்டமைப்புக்கள் உள்ளன. அதிகார பரவலாக்கம் மூலமாகவே ஒருமித்த சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்.

ஏக்கிய என்பது ஒருமித்த நாடு என்று அர்த்தமாகும். அதில் எந்த பிளவும் இல்லை. அதனால் புதிய அரசியலமைப்பினூடாக நாடு பிளவுபடும் என்ற சந்தேகத்தில் இருந்து சிங்கள மக்கள் விடுபடவேண்டும்.

அத்துடன் புதிய அரசியலமைப்பினூடாக சிறுபான்மை மக்களின் பிரச்சினை மாத்திரமின்றி சிங்கள மக்களின் பிரச்சினையும் தீர்க்கப்படவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க