கட்டுரைகள்

முல்லைத்தீவில் பாரிய அளவில் அழிக்கப்படும் இயற்கை வளங்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் வனப்பகுதிகள் மற்றும் இயற்கை வளங்கள் மிகவும் கடுமையான சட்டங்களுடன் பாதுகாக்கப்பட்டு வந்தமையானது அனைவரும் அறிந்த விடயமாகும்.

இந்நிலையில் யுத்தம் நிறைவடைந்து சுமார் 10 ஆண்டுகளை தாண்டி விட்டபோதும் விடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இயற்கை வளங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரியளவில் அழிக்கப்பட்டுக்கொண்டிருப்பதை அரசியல்வாதிகள் அரச அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கின்றது

அந்த வகையிலே முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்தளவில் கருங்கல் அகழ்வு கிரவல் அகழ்வு காடழிப்பு மரவியாபாரம் என பல்வேறு வழிகளில் இயற்கை வளங்கள் அளிக்கப்படுவதோடு மணல் அகழ்வில் மூலமும் பாரிய அளவில் இயற்கை வளங்களும் வனப்பகுதிகளும் அழிக்கப்பட்டு வருவது வேதனை அளிக்கின்றது

முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்த அளவில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதினெட்டாம் போர் பனிக்கன்குளம் கிழவன்குளம் மாங்குளம் அம்பகாமம் மணவாளன் பட்டமளிப்பு ஒன்பதாம் கட்டை ஆகிய பல்வேறு பகுதிகளில் அதிகளவான மணல் அகழ்வு அனுமதிப் பத்திரம் பெறப்பட்டு அனுமதி விதிமுறைகளை மீறியும் சட்டவிரோதமாகவும் அனுமதிப்பத்திரங்கள் பெறப்படாமலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது

அதேபோன்று துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவின் ஐயன்கன்குளம் புத்துவெட்டுவான் கோட்டைகட்டியகுளம் பழையமுறிகண்டி அம்பலப்பெருமாள்குளம் போன்ற பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறான மணல் அகழ்வு அனுமதிப் பத்திரங்கள் பெறப்பட்டும் அனுமதிப்பத்திரங்கள் பெறப்படாமலும் அனுமதிப்பத்திர வழிமுறைகளை மீறியும் பல்வேறு வகையில் அழிவுகளை ஏற்படுத்தும் வகையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன

அதேபோன்று கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் இதே போன்று சட்டவிரோதமான முறையில் இடம்பெற்று வருகின்றது அதேபோன்று மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவிலும் இவ்வாறான நடவடிக்கைகள் அனுமதிப்பத்திரங்கள் இன்றியும் அனுமதிப்பத்திரங்கள் பெறப்பட்டும் அனுமதிப்பத்திர நிபந்தனைகளையும் மீறியும் பல்வேறு வகைகளிலும் இடம்பெற்று வருகின்றது

குறிப்பாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளான உடையார்கட்டு தெற்கு ரெட்பானா இருட்டுமடு சுதந்திரபுரம் தேவிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பாரியளவில் காடுகள் அழிக்கப்பட்டு மணல் அகழ்வு என்ற பெயரில் இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டு கொண்டிருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது சட்ட விதிமுறைகள் அனைத்தையும் தாண்டி அனுமதிப் பத்திரத்துக்கு முரணாக இடம்பெறும் மணல் அகழ்வு அனுமதிப் பத்திரம் பெறாமலே பல இடங்களிலும் இந்த மணல் அகழ்வு இடம்பெறுகிறது

குறிப்பாக மாவட்ட பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் மணல் அகழ்வு தொடர்பாக பல மணி நேரங்கள் விவாதிக்கப்பட்டு பலவிதமான நடைமுறைகள் கொண்டுவரப்பட்டு வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு மணல் அகழ்வு பத்திரம் வழங்குவதில்லை எனவும் உள்ளூர் அமைப்புக்களுக்கும் மாவடடத்தை சேந்தவர்களுக்கும் இந்த மணல் அகழ்வு பத்திரங்களை வழங்குவது எனவும் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டாலும் வெளி இடங்களை சேர்ந்த பல்வேறு செல்வந்தர்களுக்கு அரசியல் பின்னணி மற்றும் பண பின்னணிகளின் மத்தியில் அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும் இந்த மணல் அகழ்வு அனுமதி வழங்கப்படுகின்றன

குறிப்பிட்ட சில செல்வந்தர்கள் மணல் அகழ்வு நடவடிக்கைகளில் விடுகின்ற எந்தவித பிழைகளையும் எந்த அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை இந்நிலையில் அதை சாதகமாக பயன்படுத்தி பல்வேறு தரப்பினரும் சட்ட விதிமுறைகளை மீறி அனுமதிப்பத்திரங்கள் இன்றி பல்வேறு பகுதிகளிலும் மணல் அகழ்வில் ஈடுபடுகின்றார்கள் இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தின் இயற்கை வளங்கள் பாரியளவில் பாதிக்கப்படுகின்றன

எனவே இந்த விடயங்களில் அதிகாரிகள் ஏன் அக்கறை கொள்ளவில்லை என மக்கள் அங்கலாய்க்கிறார்கள் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இடம்பெற்று வருகின்ற இந்த சட்டவிரோத மணல் அகழ்வுகள் மற்றும் அனுமதிப்பத்திர நடைமுறைகளை மீறிய மணல் அகழ்வு நடவடிக்கைகள் என்பவற்றால் தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டம் வறட்சியான நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது

குறிப்பாக பல ஆண்டுகாலமாக முல்லைத்தீவு வறட்சி என்பதை அறிந்து இராத நிலையில் அண்மைய மூன்று நான்கு வருடங்களாக தொடர்ச்சியாக வறட்சி முல்லைத்தீவு மாவட்டத்தை வாட்டி வருகின்றது இவ்வாறான இயற்கை வளங்கள் காடுகள் அழிக்கப்படுவது இதற்கு காரணம் என மக்கள் அங்கலாய்க்கின்றனர்

எனவே இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை மிக விரைவாக நிறுத்தி இந்த விடயத்தில் அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் அக்கறை கொண்டு செயற்பட வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

கருத்து தெரிவிக்க