உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

முல்லைத்தீவில் சட்டவிரோத மணல் அகழ்வு:மக்கள் விசனம்

இயற்கை வளங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரியளவில் அழிக்கப்பட்டுக்கொண்டிருப்பதை அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் எவரும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கின்றது என அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கருங்கல் அகழ்வு, கிரவல் அகழ்வு காடழிப்பு மரவியாபாரம் என பல்வேறு வழிகளில் இயற்கை வளங்கள் அளிக்கப்படுவதோடு மணல் அகழ்வில் மூலமும் பாரிய அளவில் இயற்கை வளங்களும் வனப்பகுதிகளும் அழிக்கப்பட்டு வருகின்றது.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதினெட்டாம் போர் பனிக்கன்குளம், கிழவன்குளம், மாங்குளம் அம்பகாமம், மணவாளன், பட்டமளிப்பு, ஒன்பதாம் கட்டை ஆகிய பல்வேறு பகுதிகளில் அதிகளவான மணல் அகழ்வு அனுமதிப் பத்திரம் பெறப்பட்டு அனுமதி விதிமுறைகளை மீறியும் சட்டவிரோதமாகவும் அனுமதிப்பத்திரங்கள் பெறப்படாமலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

அதேபோன்று துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவின் ஐயன்கன்குளம் புத்துவெட்டுவான், கோட்டைகட்டியகுளம், பழையமுறிகண்டி, அம்பலப்பெருமாள்குளம் போன்ற பல்வேறு பகுதிகளிலும் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுகின்றன.

அதேபோன்று கரைதுறைப்பற்று மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவிலும் மேலும் முல்லைத்தீவின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது

எனவே இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை மிக விரைவாக நிறுத்தி இந்த விடயத்தில் அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் அக்கறை கொண்டு செயற்பட வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க