82 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரத்தினக்கலை கொள்ளையடித்த நபர் வெள்ளவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் களவாடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
வௌ்ளவத்தையில் இருந்து பம்பலப்பிட்டிக்கு சென்ற பேருந்தில் பயணித்தவரிடம் இருந்து இரத்தினகல்லும் 1 இலட்சம் 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசோலையும் களவாடப்பட்டிருப்பதாக காவல்துறையில் முறைபாடு செய்யப்பட்டிருந்தது.
மேற்படி முறைப்பாட்டிற்கு அமையவே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட நபர் பாணந்துறை பகுதியை சேர்ந்த 46 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க