உள்நாட்டு செய்திகள்புதியவை

பௌத்தாலோக்க மாவத்தையைச் சுற்றி விசேட போக்குவரத்து திட்டம்

இன்று முதல் (ஜூலை 26) பௌத்தாலோக்க மாவத்தையைச் சுற்றி மூன்று மாதங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம் செயற்பட உள்ளதாக என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி வாகனங்கள் தர்ஸ்டன் வீதி, சுதந்திர அவென்யூ சுற்றுவட்டம் , மற்றும்  ஸ்டேன்லி விஜேசுந்தர மாவத்தை வழியாக பௌத்தாலோக்க மாவத்தைக்கு பயணிக்க முடியும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்டேன்லி விஜேசுந்தர மாவத்தை சந்தியிலிருந்து தும்முல்ல சுற்றுவட்டம் வரைஉள்ள வீதியில் இடம்பெற்று வரும் புனர் நிர்மாண பணிகள் காரணமாக இந்த போக்குவரத்து திட்டம் செயற்படுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க