அழகு / ஆரோக்கியம்

மீண்டும் சூடாக்கி சாப்பிடக் கூடாத உணவுகள் !

உணவுகளை சூடாக்கி சாப்பிட்டால் தான் ஆரோக்கியம் என்ற ஒரு தவறான கருத்து நிலவுகிறது. தேவையான நேரம் உணவைச் சமைத்து சாப்பிடாமல் தேவைக்கு அதிகமாக சமைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, பின்னர் அவற்றை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவது வழக்கமாகி விட்டது. இவ்வாறு சாப்பிடுவதால் அவற்றில் உள்ள சத்துக்கள் அழிந்து விடுகிறது என வைத்திய நிபுணர்கள் தெரிவித்து இருக்கின்றனர். அவ்வாறு மீண்டும் சூடாக்கி சாப்பிடக் கூடாத உணவு வகைகள் பற்றி பார்ப்போம்.

கோழி இறைச்சியில் ஏராளமான  புரதச்சத்துகள் நிறைந்துள்ளது. அதனை திரும்பவும் சூடாக்கி சாப்பிடுவதால் அது நஞ்சாகும் வாய்ப்பு உள்ளது. எனவே அதை தவிர்த்து கொள்ள வேண்டும்.

கீரையில் அதிகளவு இரும்புச் சத்தும், நைட்ரேட்ஸும் உள்ளது. இதனை சூடாக்கும் போது நைட்ரைட்டாக  மாறும். இது புற்றுநோயை ஏற்படுத்தும். மேலும் செமிபாடு பிரச்சனையையும் ஏற்படுத்தும்.

பொரித்த முட்டை , சோறு இவற்றையும் திரும்பவும் சூடாக்கி சாப்பிடும் போது அவை நஞ்சாக மாறுவதோடு, செமிபாட்டுப் பிரச்சினைகளையும் தரும். அதிகளவு புரதம் நிறைந்த முட்டையை எக்காரணம் கொண்டும் திரும்பவும் சூடாக்கி சாப்பிடக் கூடாது.

காளானையும் உடனுக்குடன் சமைத்து சாப்பிட வேண்டும். இதிலும் நிறைய புரதம் உள்ளது. எனவே திரும்பவும் சூடாக்கும் போது, நஞ்சாக மாறுவதோடு செமிபாட்டுப் பிரச்சினைகள். வயிற்றுக் கோளாறுகள் போன்றவை ஏற்படும்.

உருளைக்கிழங்கை சமைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பின் சூடாக்கி சாப்பிடும் போது, அதில் பக்றீரியாக்கள் தங்கி விடும். இதனால் அது நஞ்சாக மாறுவதோடு. வயிற்றைச் பிரட்டுதல் , சத்தி, உடல் ஆரோக்கியமின்மை போன்றன ஏற்படும்.

பீற்றூட்டும் கீரையைப் போன்று நைட்ரேட்ஸை உள்ளடக்கியது. இதனையும் திரும்பவும் சூடாக்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

எந்த வகையான சமையல் எண்ணெயாக இருந்தாலும் ஒருமுறை சமையலுக்கு பாவித்த பின்னர் திரும்பவும் பாவிக்க கூடாது.  ஏனெனில் அதனை திரும்ப பாவிக்கும் போது அடர்த்தி கூடிய விடும். இதனால் புற்றுநோய், இதயநோய் ஏற்படும்.

கருத்து தெரிவிக்க