பொன்மொழிகள்

சாணக்கியரின் உபதேசத்திலிருந்து!

சேவலிடம் இருந்து விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், தேவையானவற்றை பிரித்து கொடுத்தல், தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள்.

காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள், இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு.

நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டியவை, கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல் உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல் நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல் நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல்படுதல் முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல் உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் .

கருத்து தெரிவிக்க