அழகு / ஆரோக்கியம்

தேனில் உள்ள அளவற்ற நன்மைகள்

இன்றைய நவீன யுகத்தில் உணவுப் பழக்கங்கள் எல்லாம்  மாறி விட்டது. துரித உணவுப் பழக்கங்களே எம்மைப் பற்றி பிடித்துள்ளது. இது ஆரோக்கிய கேடுகளையே உருவாக்கும். உணவில் சீனிக்கு பதிலாக தேனை பயன்படுத்தி வந்தால் ஆரோக்கியத்துடன் வாழலாம். இயற்கையின் அற்புதமான தேனை சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வந்தனர். இதில் எழுபது விதமான சத்துகளும் விற்றமின்களும் நிறைந்துள்ளது.

இரவில் படுப்பதற்கு முன் பாலில் தேன் கலந்து பருகினால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும்.

இரண்டு தேக்கரண்டி சுடுநீரில் ஒரு தேக்கரண்டி தேனும்.சிறிது கராம்புத் தூளும் கலந்து மூட்டுகளில் ஏற்படும் வலிகளுக்கு பூசி வந்தால் விரைவில் குணமாகும்.

சாப்பிடும் முன்னர் இரண்டு தேக்கரண்டி தேன் சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல், அல்சர் போன்றன குணமாகும்.

நீரிழிவு நோயாளிகள் சீனியை தவிர்த்து தேன் உபயோகித்து வந்தால் நோய் கட்டுக்குள் இருக்கும்.

நெல்லிக்காய்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வர நீரிழிவு, இரத்த அழுத்தம், மலச்சிக்கல் போன்றவை குணமடைவதோடு இளமையாக இருக்கவும் உதவுகிறது.

கருத்து தெரிவிக்க