கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்றதும் முர்த்தி தலம் தீர்த்தம் என்பன ஒருங்கே அமையப்பெற்ற மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு இன்று இடம்பெற்றது.
ஆலய பிரதம குரு சௌந்தராஜ குருக்கள் தலைமையில் நண்பகல் 12 மணியளவில் நிகழ்வு இடம்பெற்றது.
இன்று காலை முலமுர்த்திக்கு விஷேட பூஜைகள் இடம்பெற்றதை தொடர்ந்து கொடிஸ்தம்பத்திங்கு அருகில் மாமாங்கேஸ்வரர் எழுந்தருளி கொடிஸ்தம்பத்திற்கும் கொடிச்சீலைக்கும் விசேட பூஜைகள் நடைபெற்று அடியார்களின் அரோகரா கோசத்துடன் கொடியேற்றம் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ள இவ்வுற்சவத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) மட்டக்களப்பு ஸ்ரீ.வீரகத்தி பிள்ளையார் ஆலயத்திலிருந்து கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது.
இவ்வுற்சவத்தின் தேர்த்திருவிழா 30.07.2019 அன்று காலை இடம் பெறவுள்ளதோடு, தீர்த்தோற்சவமானது 31.07.2019 அன்று நண்பகல் ஆலயதீர்த்தகேணியில் நடைபெறவுள்ளது.
ஆடி அமாவாசை பிதிர்கடன் நிறைவேற்றும் பிரதான ஆலயங்களில் ஒன்றான மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் உற்சவத்திற்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் தினமும் மூலவர் பூஜை யாக தம்ப பூஜை அபிசேகம் ஆகியவை இடம்பெற்று சுவாமி உள்வீதி வெளிவீதி வலம்வருதல் இடம்பெறவுள்ளது.
கருத்து தெரிவிக்க