உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

ஐ.தே.கவில் இணையும் மைத்திரியின் சகாக்கள்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த சமரசிங்க, மொஹான் லால் கிரேரு ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளனர் என அரசியல் தரப்புகளிலிருந்து அறியமுடிகின்றது.

இதற்கான பேச்சுகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளபோதிலும் இவர்களை கட்சியில் இணைத்துக்ககொள்வதற்கு ஐ.தே.கவின் தொகுதி அமைப்பாளர்கள் சிலர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதால் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கடந்த 11 ஆம் திகதி வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இவர்கள் இருவரும் வாக்கெடுப்பை புறக்கணித்திருந்தனர்.

மஹிந்த சமரசிங்க, மொஹான் லால் கிரேரு ஆகிய இருவரும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தே மஹிந்த ஆட்சியின்போது சுதந்திரக்கட்சி பக்கம் தாவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

கருத்து தெரிவிக்க