ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து எஸ்.பி. திஸாநாயக்க நீக்கப்படவுள்ளார் என அரசியல் தரப்புகளிலிருந்து அறியமுடிகின்றது.
கட்சியின் அடுத்த மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான யோசனை முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது எனவும் தெரியவருகின்றது.
சுதந்திரக்கட்சியில் உயர் பதவி வகித்தாலும் கூட்டு எதிரணிக்கு விசுவாசமாகவே எஸ்.பி. திஸாநாயக்க செயற்படுவதாகவும், எனவே, அவரிடமிருந்து பொருளாளர் பதவி பறிக்கப்பட வேண்டும் எனவும் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளின் பிரகாரமே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்துடன், சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளருமான மஹிந்த அமரவீரவை, எஸ்.பி. திஸாநாயக்க அண்மையில் கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே எஸ்.பி. திஸாநாயக்கவின் பதவி பறிக்கப்படவுள்ளது.
கருத்து தெரிவிக்க