கட்டுரைகள்

மலையக வரலாறும் அரசியலும் 3

1823 லிருந்து 1900 ம் வரையிலான கால கட்டம் இருள் சூழ்ந்த கால கட்டமென குறிப்பிட்டிருந்தோம். 1910– 1917 களிலிருந்தே மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. தோட்டங்களில் இவ்வாறான சிறு மாற்றங்கள்ஏற்பட்ட போதிலும், தொழிலாளர்கள் தங்களுக்கும் தோட்ட உரிமையாளர்களுக்கும் இடையில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு தொழிற்சங்கம் அமைத்துக் கொள்வதற்கோ ரூபவ் தங்கள் சார்பாக பேசுவதற்கு தங்களுடைய பிரதிநிதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்கோ தோட்ட நிர்வாகங்கள் உடன் படவில்லை.

இலங்கையில் அப்போது தொழிற்சங்க சட்டங்கள் இருந்த போதிலும்ரூபவ் அவற்றிலிருந்து தொழிலாளர்கள் நன்மை பெற முடியாமலிருந்தது. தொழிலாளர் ஒன்று கூடி கூட்டம் நடத்தக் கூட இடம் கிடைக்க வில்லை.! தோட்ட நிலம் எல்லாமே உரிமையாளருக்கே சொந்தம். தொழிலாளரின் பிரதிநிதிகள்ரூபவ் தோட்டங்களுக்குச் சென்று, தொழிலாளர்களைச் சந்திக்க முடியாமலிருந்தனர். தனியார்கள் எவரும் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தோட்டங்களுக்குள் செல்ல முடியாதபடி 1017 ம் ஆண்டில் உருவாக்கிய 38 ம் இலக்கச் சட்டம் தடை விதித்தது.

1930 ம் ஆண்டில் டொனமூர் அரசியல் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து ஒரு லட்சம் இந்தியத் தொழிலாளர்கள் குடியுரிமை பெற்றார்கள். இவ்வாறான சூழ்நிலையில் 1928 லிருந்து 1931 ம் ஆண்டு வரை கோதண்ட ராமன் நடேசய்யர் சட்டசபை உறுப்பினராக, தோட்டமக்கள் சார்பாக கடமை புரிந்தார். நடேசய்யர் 1931 ம் ஆண்டு இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சம்மேளனத்தை உருவாக்கினார்.

இதற்கு முன்பு இலங்கையில் ஏ.குணசிங்க 1922 ம் ஆண்டு இலங்கை
தொழிலாளர் சங்கம் என்ற தொழிலாளர் அமைப்பை உருவாக்கினார். நடேசய்யர் இவருடன் ஏறக்குறைய இரண்டு வருடங்கள் 1926 லிருந்து 1928 வரை இணைந்து செயல் பட்டார். குணசிங்கவின் இந்திய எதிர்ப்புவாதக் கொள்கையால் அவரை விட்டு விலகிக் கொண்டார். 1931 ல் உருவாகிய தொழிற்சங்கம் தொழிலாளர் மத்தியில் உத்வேகமாகவும்ரூபவ் ஆவேசமாகவும் உருவெடுத்து வளர்ந்தது.

தொழிற்சங்க தலைமைக் காரியாலயத்தை அட்டன் நகரில் வைத்துக் கொண்டார்.
1930 களிலிருந்தே தொழிலாளரின்ரூபவ் சமூக நிலைமைகளிலும், தொழில் சம்பந்தப்பட்ட நிலைமைகளிலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. தொழிற்சங்கங்கள் உருவாகி வந்ததால் தொழிலாளர்களுக்கும், அவர்களின் “நேர் அதிகாரிகளான” கங்காணிகளின் அதிகாரங்கள் தகர்க்கப்பட்டுக் கொண்டு வந்தன. இக் காலப்பகுதியில், கங்காணி முறையை கட்டுப்படுத்தும் சட்டங்கள் உருவாகின. கங்காணிகளின் வாரிசுகள் பொருளாதாரப் பலத்தால் தோட்ட உரிமையாளர்களாகவும், வர்த்தகர்களாகவும் மாற்றமடைந்தனர். 1940 களில் இந்தியத் தொழிலாளர்கனின் இலங்கை வருகை தடை செய்யப்பட்டது. பெரிய கங்காணிகளுக்கு ஆள் திரட்டும் வேலைகள் நிறுத்தப்பட்டன. 1921 ம் ஆண்டு அடிமை நிலைக்கு காரணமாகவிருந்த “துண்டு முறை”ஒழிக்கப்பட்டது.

கங்காணிகள் தங்களது “பெரட்டுக்கு” உட்பட்டிருந்த தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டதால், தொழிலாளர்கள் தங்களது “சொந்த உடைமை” என்ற முறை தகர்த்தெறியப்பட்டது. கங்காணிகளின் கட்டளைகளால் தொழிலாளர்கள் தோட்டத்துக்கு தோட்டம் இடமாற்றும் அதிகாரம் தொலைந்து போனது. அத்துடன் 1927 ல் காந்தியின் இலங்கை வருகையால்ரூபவ் குறைந்தப்பட்ச சம்பளம் பற்றிய சட்டம் உருவாகி, தொழிலாளரிடம் நேரடியாக சமபளம் வழங்கும் முறை வழக்கத்துக்கு வந்தது.

தொழிலாளர்கள்; ஓரளவு சுதந்திர மனிதர்களாக “அரை அடிமை” நிலைமையிலிருந்து நிமிரத் தொடங்கினார்கள்.! கோப்பித் தோட்டக் கூலிகளாக இலங்கை வந்த இந்தியத் தமிழ்த் தொழிலாளர்கள் ரூபவ் காந்தியின் வருகையிலிருந்துசம்பளம் பெறுவதிலும், சுகாதார, நலவுரிமை, பாதுகாப்பிலும் வரவேற்கத்தக்க மாற்றங்களைக் கண்டனர்.

அவர்கள் இலங்கையில் நிரந்தரமாக வாழ்வதற்கு தங்கள் மனதைத் திடப்படுத்திக் கொண்டார்கள். இலங்கை நாட்டு நிர்மாண வளர்ச்சிக்கு இந்தியத் தமிழர்களே லட்சக் கணக்கான உயிர்த் தியாகங்களை செய்தார்கள். பூகோளத்தில் இலங்கை என்ற ஒரு சிறு தீவை உலக நாடுகள் அறிவதற்கு அடையாளம் காட்டியவர்கள் இந்தியத் தமிழர்களேயாவர்.

நாட்டின் பணப் பயிரான கோப்பி, தேயிலை ரப்பர், தென்னை என்று விவசாயத்தைஉருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை நிலை நாட்டிஅந்நிய செலாவணியைப் பெற்றுக் கொடுத்தாலும் சிங்கள அரசியல் தலைவர்கள்ரூபவ் பல கட்சிகளைச் சேர்ந்திருந்தாலும்ரூபவ் இந்தியத் தமிழ் மக்களை இலங்கையில் வைத்துக்கொள்வதில் எதிர்ப்புணர்வுகளையே காட்டி வந்தனர். இவர்களது வெறுப்புணர்வுகளுக்கு தூபம் போட்டவர்களாக வட மாகாணத்தைச் சேர்ந்த சில தமிழ் அரசியல்வாதிகளும் உடந்தையாகவிருந்ததால்ரூபவ் இந்த வெறுப்புணர்வு கொளுந்து விட்டெறியும் அரசியல் நிலைப்பாடுகளாக பலமடைந்தன. இந்த எதிர்ப்பு உணர்வுகளே 1948 ல் இலங்கைசுதந்திரம் அடைந்த போது, அந்த கசப்பான சம்பவம் நடந்தது..

1948 ம் ஆண்டு பிரித்தானிய காலனித்துவ ஆட்சி அஸ்தமனமாகியது. இந்தியாவையும் இலங்கையையும் வெள்ளை ஆட்சியினர் விட்டகன்று சென்றனர்.. 1948 பெப்ரவரி மாதம் 4 ம் திகதி இலங்கையில் சுதந்திரம் பிரகடனப்படுத்தப்பட்டது.

இலங்கை சுதந்திர கீதம் பாடியது. சுதேசிய சிங்களத் தலைவர்களும் சிங்கள மக்களும் ஆனந்தக் கூத்தாடினார்கள்.வடக்கு, கிழக்கு, தமிழர்களும், தாய் நாட்டுச் சுதந்திரத்தை அனுபவித்து மகிழ்ச்சியடைந்தார்கள். அந்தமகிழ்ச்சியான தினமே,இலங்கையை உருவாக்கிக் கொடுத்த தேச பிதாக்களான இந்தியத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது.

அவர்களின் வாக்குரிமையும் பறிக்கப்பட்டது. அவர்கள் நாடற்றவர்களாக இழிவு படுத்தப்பட்டு, இந்தியாவை நோக்கிச் செல்லுமாறு கட்டளையிடப்பட்டனர். சிங்கள மக்களின் தேச பிதாவான டி.எஸ்.சேனநாயக்கமலையகத் தமிழரின் குரல்வளையை நெரித்தார். 1948 ம் ஆண்டு 18 ம் இலக்க இலங்கை குடியுரிமைச் சட்டம் பிறந்தது. இந்தச் சட்டம் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ம் திகதி நிறைவேறியது.

அதே ஆண்டு நவம்பர் மாதம் 15 ம் திகதி சட்டம் அமுலாகியது.
அவர்களது இரக்கமற்ற செயலோடுரூபவ் அவர்களது மனசாட்சியும் பேசத் தொடங்கியது. மனசாட்சிக்குப் பயந்தார்கள். விருப்பமானவர்கள் இலங்கை குடிகளாவதற்கு சட்டத்துக்கு இயைந்தபடி குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும்
சட்டத்தையும் காட்டினார்கள். அந்தச் சட்டம் 1949 ம் ஆண்டு 3 ம் இலக்க இந்தியர் – பாகிஸ்தானியர் குடியிருப்பாளர் (பிரஜாவுரிமை) சட்டம் என முன் வந்து
நின்றது…

(வளரும்)

– முனியாண்டி

கருத்து தெரிவிக்க