இலங்கையின் இந்த வருடத்துக்கான இறுதி சந்திர கிரகணம் இன்று இரவு தென்பட உள்ளது.
மத்திய இரவுக்கு பின்னர் 14.13 மணியளவில் இது தென்படும் என குறிப்பிடப்படுகிறது. இது 5 .47 வரையில் தென்படும் என குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை அப்பலோ 11 விண்கலம் சந்திரனில் இறக்கிய 50 வருட நிறைவும் இன்று நினைவுகூறப்படுகிறது.
இந்த அடிப்படையில் இன்றைய சந்திர கிரகணம் முக்கியத்துவம் வாய்ந்தது என குறிப்பிடப்படுகிறது.
இந்த சந்திர கிரகணம் அவுஸ்ரேலியா ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகள் ஆகியவற்றில் முழுமையாக தென்படும்.
எனினும் வட அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளில் பாதியளவில் தென்படும் என குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை 2020 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி அடுத்த சந்திர கிரகணம் தென்படும் என குறிப்பிடப்படுகிறது.
கருத்து தெரிவிக்க