பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கையொப்பம் அடங்கிய கடிதம் ஒன்று இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விகாரைகளிலுள்ள பெளத்த மதகுருக்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்த கருத்து தொடர்பில் அவதானம் செலுத்தியே இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி ரஞ்சன் ராமநாயக்கவின் பெளத்த மத குருக்கள் தொடர்பான கருத்து தொடர்பில் ஜூலை 21ம் திகதிக்கு முன்னர் எழுத்து மூலம் அறிவிக்கப்பட வேண்டும் என பிரதமரின் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்காவின் கருத்தை முற்றாக நிராகரிப்பதாகவும் பிரதமரின் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க