ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆராயப்பட்டுவருவதாக அரசியல் தரப்புகளிலிருந்து அறியமுடிகின்றது.
தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டு பிரிட்டன் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது நாடு திரும்பியுள்ள நிலையில், இவ்விவகாரம் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடன் பேச்சு நடத்துவார் எனவும் தெரியவருகின்றது.
ஊவா மாகாணசபையைத்தவிர ஏனைய எட்டு மாகாணசபைகளினதும் பதவிகாலம் நிறைவடைந்து ஆளுநர் ஆட்சியே இடம்பெற்றுவருகின்றது.
எனவே, மாகாணசபைத் தேர்தலை ஒரே தடவையில் நடத்துமாறு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும், சிவில் அமைப்புகளும் வலியுறுத்திவருகின்றன.
இந்நிலையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் தேர்தல் ஆணைக்குழுவும் உறுதியாக இருக்கின்றது. பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அண்மையில் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஜனாதிபதிக்கும், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
கருத்து தெரிவிக்க