ஆப்கானிஸ்தானில் அண்மைக் காலமாக இராணுவத்தினருக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையில் மோதல்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மூன்று மாகாணங்களில் அடுத்தடுத்து நடந்த தாக்குதலில் 42 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜாவ்ஜான் மாகாணத்தில் உள்ள கார்கீன் மாவட்டத்தில் இடம்பெற்ற மோதலின் போது இராணுவத்தின் கடும் தாக்குதலில் 20 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதேபோல் டக்கார் மாகாணத்தில் உள்ள நமகாப் மாவட்டத்தில் தலிபான்கள் நுழைய முயன்ற போது அங்குள்ள கிராமத்தவர்களுக்கும் தலிபான்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 6 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் பால்க் மாகாணத்தில் உள்ள இராணவத்தளம் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்திய போது இராணுவத்தின் எதிர்த் தாக்குதலில் 16 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அடுத்தடுத்து நடந்த தொடர் தாக்குதலில் 42 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க