அமெரிக்காவுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள றொட்னி பெரேராவை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கத்தின் தெற்கு மத்திய ஆசிய பிராந்தியத்திற்கான உதவி இராஜாங்கச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
குறித்த சந்திப்பு கடந்த 11ஆம் நாள் வொசிங்டனில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, முக்கியமாக, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதா மற்றும் பாதுகாப்பு துறை உறவுகளை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக, அலிஸ் வெல்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் பொறுப்புக்கூறல், நீதி, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் குறித்த எமது கலந்துரையாடல் பாதுகாப்பான மற்றும் வளமான இலங்கையை ஊக்குவிப்பதாகவும், பகிரப்பட்ட மதிப்புகளை மேம்படுத்தும் நோக்குடையதாகவும் இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
கருத்து தெரிவிக்க