அழகு / ஆரோக்கியம்

நகங்களை பராமரிப்பது எப்படி…?

சிலருக்கு நகங்களின் வளர்ச்சி மிகவும் குறைவாக இருக்கும். அல்லது வெகு விரைவில் உடைந்து விடும். இன்னும் சிலருக்கு கரடுமுரடாக காணப்படும். இவற்றுக்கு காரணம் ஊட்டச்சத்தின்மையும்,  உடல் நலக் குறைபாடும் ஆகும். உரிய முறையில் பராமரித்தால் நகப் பிரச்சனைகள் தீர்ந்து விடும்.

இரவில் படுப்பதற்கு முன் ஒலிவ் எண்ணெயை சூடாக்கி நகத்தின் மேல் தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்து பின் மெல்லிய பருத்தி துணியால் சுற்றி விட்டு படுக்கலாம். இவ்வாறு கிழமையில் தொடர்ந்து செய்து வந்தால் நகங்கள் நீளமாகவும் உறுதியாகவும் வளரும்.

தோடம்பழச் சாறில் விரல்களை 10 நிமிடங்கள் ஊற வைத்து பின் மெல்லிய துணியால் துடைத்து விடவும். இவ்வாறு கிழமையில் இரண்டு தரம் செய்து வந்தால் நகங்கள் நன்றாக வளரும்.

எலுமிச்சை பழத்தை வெட்டி அதன் பாதியால் விரல் நகங்களின் மேல் மசாஜ் செய்து வரலாம்.

தண்ணீரை மெலிதாக சூடாக்கி அதனுள் சிறிதளவு உப்பு கலந்து, அதனுள் விரல்களை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் மெல்லிய துணியால் துடைத்து விடவும். இவ்வாறு செய்வதால் நகங்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

பாதாம் எண்ணெயை நகத்தில் பூசி மசாஜ் செய்து பின் கடலை மாவினால் தேய்த்து கழுவி வந்தால் நகங்கள் பளபளப்பாக மாறும்.

 

அது மட்டுமன்றி நமது அன்றாட உணவில் அதிகளவு பச்சை மரக்கறி வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கருத்து தெரிவிக்க