ஏப்ரல் 21 ம் திகதி இடம்பெற்ற நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் உயிர் இழந்தவர்களுக்கு இழப்பீடாக ரூ .198 மில்லியனுக்கும் அதிகமான தொகையை அரசாங்கம் வழங்கியுள்ளது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட மொத்த 263 பேரில் 201 பேருக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தாக்குதல்களில் காயமடைந்த 438 பேருக்கும் மொத்தம் ரூ .64 மில்லியன் வரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பில் 500 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சேதமடைந்த மூன்று தேவாலயங்களில் புனரமைப்பு நடவடிக்கைகள் சில நிறைவடைந்துள்ளதுடன் தற்போது சில புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க