உள்நாட்டு செய்திகள்புதியவை

அவுஸ்திரேலிய ஜனாதிபதியிடம் சான்றுகளை வழங்கிய இலங்கை தூதர்

அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை தூதர் சரோஜா சிறிசேன இந்த வாரம் அவுஸ்திரேலிய ஜனாதிபதி அலெக்சாண்டர் வான் டெர் பெல்லனிடம் தமது அறிமுக ஆவணத்தை வழங்கியுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சு தமது அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளது

அவுஸ்திரேலிய தலைநகர் வியன்னாவில் உள்ள ஹோஃப்ஸ்பர்க் அரண்மனையில் நடந்த நிகழ்வின் போது, அவுஸ்திரேலியர்கள் உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகளுக்கான உலகளாவிய இடமாக இலங்கை காணப்படுவதாக ஜனாதிபதி பெலன் பாராட்டினார் என வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்ட தூதர் இலங்கை வெளியுறவு சேவையில் பணிப்பாளர் நாயகமாகவும், வெளியுறவு அமைச்சீன செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

1998 இல் வெளியுறவு சேவையில் சேர்ந்த சரோஜா சிறிசேனா மும்பைக்கான இலங்கையின் துணைத் தூதராக பணியாற்றியுள்ளார், மேலும் ஜெனீவா, பிரஸ்ஸல்ஸ் மற்றும் பிரான்சில் உள்ள இலங்கையின் தூதரகங்களிலும் பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க