உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஜாலிய விக்ரம சூரியவிற்கு சரீர பிணையாக இருந்த இருவருக்கு பிடியாணை

அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரம சூரியவிற்கு சரீர பிணையாக இருந்த இருவர் மீது கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நேற்று பிடியாணையை பிறப்பித்திருக்கின்றது.

ஏற்கனவே ஒரு வழக்கில் இந்த இருவரும் ஜாலிய விக்ரம சூரியவிற்கு சரீர பிணைக்காக கையொப்பம் இட்டவர்கள். எனவே இவர்கள் இருவரையும் கைது செய்யுமாறு கோட்டை நீதிவான் ராங் திசாநாயக்க நேற்று மீண்டுமொரு பிடியாணையை பிறப்பித்திருக்கின்றார்.

இதன்படி ஜாலிய விக்ரம சூரியவின் மனைவியும் அவருடைய மைத்துனருமே இந்த இரண்டு சரீர பிணைகளுக்காக கையொப்பம் இட்டவர்கள் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

இவர்கள் இருவரும் ஏற்கனவே காவல்துறையின் கண்காணிப்பிலிருந்து மறைந்திருப்பதாக தகவல் வெளியாகிருகின்றது.

இதேவேளை காவல்துறையின் நிதி மோசடி பிரிவு நீதி மன்றத்துக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையின் படி 330000 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி தொடர்பிலே ஜாலிய விக்ரம சூரிய மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது.

இவர் அமெரிக்காவில் தூதுவராக இருந்தபோது இந்த முறைகேட்டில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டே சுமத்தப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில் நேற்று இரண்டு சரீர பிணையாளிகளையும் கைது செய்யுமாறு உத்தரவிட்ட கோட்டை நீதிவான் வழக்கை எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகத்திற்கு ஒத்திவைத்திருக்கின்றார்.

கருத்து தெரிவிக்க