அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
அதற்கமைய நாடாளுமன்றம் இன்று காலை 10.00 மணிக்கு கூடவுள்ளது. அதனையடுத்து, இன்று மாலை 6.30 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மற்றும் அமைச்சரவை உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என கோரி மக்கள் விடுதலை முன்னணியால் நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பொது எதிரணி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஆதரவாக வாக்களிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க