உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் படுகாயமடைந்த சட்டத்தரணி ஒருவர் தமக்கு 500 மில்லியன் ரூபாய் நட்ட ஈடு தேவை எனக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருக்கின்றார்.
முதித டி பி ஏக்கநாயக்க என்ற 55 வயதான சட்டத்தரணியே இந்த மனுவை தாத்தாக்கள் செய்திருக்கின்றார்.
இந்த தாக்கல் செய்த மனுவில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, காவல் துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் தேசிய புலன்னாய்வு துரையின் தலைவர் நிலந்த ஜயவர்தன உட்பட்ட 40 பேர் பிரவாதிகளாக குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள்.
இந்த தமது மனுவின் அடிப்படையில் மனுதாரரான முதித டி பி ஏக்கநாயக்க கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி சங்கரில்லா விருந்தகத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பின் போது தாம் காயம் அடைந்ததாக குறிப்பிட்டிருக்கின்றார்.
காலை 8 .10 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் இதன் போது தாம் கடுமையான காயங்களுக்கு உள்ளானதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
தாம் காலை உணவை முடித்து விட்டு பணம் செலுத்துவதற்காக சென்றுகொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் இந்த வெடிப்பின் போது தாம் சுமார் 15 அடி தூரத்தில் தூக்கி எறியப்பட்டதாகவும் இந்தமனு தாரர் தமது மனுவில் குறிப்பிட்டிருக்கின்றார்.
கருத்து தெரிவிக்க