ஊடகவியளாலர் கீத் நோயர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் இராணுவ முன்னாள் கோப்ரல் லலித் ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
ரிவிர செய்தித்தாளின் ஆசிரியர் உபாலி தென்னகோன் மீதான தாக்குதல் தொடர்பில் இவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் ஊடகவியளாலர் கீத் நோயர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடனும் தொடர்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை சட்டமா அதிபர் தப்புல்லா டி லிவேரா இது தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் இராணுவ கோப்ரலுக்கு எதிராக சாட்சியங்களை பதிவு செய்யுமாறும் அதேவேளை கீத் நோயர் மீதான தாக்குதல் வழக்கில் சந்தேகநபராக குறிப்பிடுமாறும் சட்டமா அதிபர் கேட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க