உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் முன்னாள் ஜனாதிபதி தனது வாக்குமூலத்தை பதிவு செய்யலாம் என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷமன் கிரியெல்ல கேட்டுக்கொண்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு, ஜனாதிபதிக்கும் அழைப்பு விடுத்திருந்தது.
எனினும் வாக்குமூலம் அளிக்க ஜனாதிபதி மறுத்திருந்தார். இந்நிலையிலேயே, இந்த விசாரணைகளில் ஜனாதிபதி உண்மைகளை தெரிவிக்க முடியும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
குறித்து நாடாளுமன்ற தெரிவுக்குழு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பரிந்துரைக்கு கீழேயே செயற்படுகின்றது.
குறித்த பரிந்துரையின் அடிப்படையில் செயற்படும் குழுவின் விசாரணைகளுக்கு தாமே செல்வதற்கு எந்தத் தடையும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து தெரிவிக்க