உள்நாட்டு செய்திகள்புதியவை

இலங்கையில் காணாமல் போன மாலைதீவு கைதி நாடுகடத்தப்பட்டார்

1988 ஆம் ஆண்டு மாலைதீவில் நடத்தப்பட்ட புரட்சியில் முன்னிலையில் இருந்து செயற்பட்ட அப்துல்லா லுதுர்பி என்பவரை இலங்கையின் மாலைதீவு உயர்ஸ்தானிகரகம் மாலைதீவுக்கு மீண்டும் நாடுகடத்தியுள்ளது.

லுதுர்பி மாலைதீவு காவல் துறையினருடன் நேற்றிரவு மாலைதீவிற்கு சென்று அடைந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

1988 ஆம் ஆண்டு அவர் மாலைதீவில் அரசியல் புரட்சியை ஆரம்பித்திருந்தார்.இதன் போது 19 பேர் கொல்லப்பட்டார்கள்.

இதனை அடுத்தே அவர் மீது குற்றசாட்டு சுமத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அப்போதைய ஜனாதிபதி அப்துல் கைம் அவரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்திருந்தார்.

இதனையடுத்து 2010 ஆம் ஆண்டு அவர் மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் இலங்கையில் வைத்து காணாமல் போய் இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த 9 வருடங்களாக இலங்கையில் மறைந்து வாழ்ந்த நிலையில் கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகரகத்தில் அடைக்கலம் பெற்றிருந்தார்.

தாக்குதலின் பின்னர் இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் தேடுதல் ஆரம்பிக்க பட்டிருந்த வேளையில் தாமும் கைது செய்ய படலாம் என்ற அச்சத்தில் அவர் அடைக்கலம் பெற்றிருந்தார்.

இந்நிலையில் மாலைதீவு உயர்ஸ்தானிகரகம் நேற்று அவரை நாடு கடத்தியுள்ளது.

கருத்து தெரிவிக்க