ஜனாதிபதியை கொலை செய்ய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் முயற்சிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இது தொடர்பில் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை தொடங்கி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் ஒழிப்புத் திட்டங்களை ஜனாதிபதி தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன. ஜனாதிபதியும் இது தொடர்பில் ஒரு நிகழ்வின் போது தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர அறிவித்துள்ளார்.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் ஒரே நோக்கம் ஜனாதிபதியை குற்றம் சுமத்துவது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு நடைமுறைப்பதுதா உத்தேசிக்கப்பட்டுள்ள மரண தண்டனைகளை நீதிமன்றம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30ம் திகதி வரைஇடை நிறுத்தி வைத்துள்ளது. இது தனக்கு திருப்தியளிக்கவில்லை என்ற கருத்தையும் அவர் முன் வைத்துள்ளார்.
கருத்து தெரிவிக்க