உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

திருகோணமலை ஐந்து மாணவர் கொலை:சட்டமா அதிபர் புதிய பணிப்புரை

திருகோணமலையில் 2006ஆம் ஆண்டு ஜனவரி 2இல் கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களின் வழக்கில் முக்கிய சாட்சிகளாக குறிப்பிடப்பட்டுள்ள மூன்று பேர் இருக்கும் இடம் குறித்து அறியுமாறு சட்டமா அதிபர் – பதில் காவல்துறை மா அதிபருக்கு பணித்துள்ளார்.

இந்த கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த 13 இலங்கைப்படையினர் விடுவிக்கப்பட்டனர்.

போதிய சாட்சிகள் இல்லை. முக்கிய சாட்சிகளின் முகவரிகளில் அவர்கள் இல்லை. அவர்களின் வெளிநாட்டு முகவரிகளும் இல்லை என்ற அரச தரப்பின் அறிக்கையின்படியே இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

எனினும் இதனை சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கண்டித்துள்ளன.

இந்தநிலையிலேயே சட்டமா அதிபரின் பணிப்புரை வெளியாகியுள்ளது.

இந்த வழக்கில் வைத்திய கலாநிதி காசிப்பிள்ளை மனோகரன், வை. புங்களலோகன் மற்றும் பரராஜசிங்கம் கோகுல்ராஜ் ஆகியோர் முக்கிய சாட்சிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

எனினும் அவர்கள் தற்போது வெளிநாடுகளில் புகலிடம் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க