ஸ்பெயின் நாட்டின் பாரம்பரிய விளையாட்டான காளை விரட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இப்போட்டியில் நூற்றுக்கணக்கான காளைகளும் , ஆயிரக் கணக்கான வீரர்களும் பங்கேற்றனர்.
இந்த காளை விரட்டு போட்டி ஸ்பெயினின் புகழ் பெற்ற பாம்லோனாவில் இவ்வாண்டும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
போட்டியின் மூன்றாம் நாளான இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் குறுகலான தெருக்களில் காளைகளை விரட்டிச் சென்றனர். அத்துடன் பலர் காளைகளால் தாக்கப்பட்டு காயம் அடைந்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க