இந்தியாவின் ஜார்க்கண்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனியை பாஜகவில் இணைக்க திட்டமிடப்பட்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
உலக கிண்ண தொடரில் டோனியின் ஆட்டம் குறித்து விமர்சனங்கள் எழுந்ததோடு அவர் ஓய்வு பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாரதீய ஜனதாவில் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், கிழக்கு டில்லியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியுள்ளதைப் போன்றே டோனியையும் அரசியலுக்குள் கொண்டு வரும் வேலைகளை பாஜக தொடங்கி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டில்லி பா.ஜ. உறுப்பினரான மனோஜ் திவாரி, டோனிக்கு நெருக்கமானவர். இதேவேளை கடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, டோனியை அமித்ஷா சந்தித்து பேசினார்.
அன்றில் இருந்தே, பாஜகவில் டோனி சேருவார் என்ற பேச்சு அடிபடத் தொடங்கியது. ஏற்கனவே இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்திய பாஜக மூத்த நிர்வாகிகளிடம், உலக கிண்ண தொடர் முடியும் வரை பொறுத்திருக்குமாறு டோனி கேட்டுக்கொண்டதாகவும் கூறப்பட்டது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் டோனி. ஓய்வுக்கு பிறகு டோனி அரசியலில் ஈடுபடலாம் எனவும் அவர் பாரதீய ஜனதாவில் சேரலாம் எனவும் கூறப்படுகிறது. ஆனால் அதுகுறித்த உறுதியான தகவல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க