உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

‘அக்கறையுடன் செயற்பட்டிருந்தால் 50 ரூபாய் சம்பள அதிகரிப்பு கிடைத்திருக்கும்’

அக்கறையுடன் செயற்பட்டிருந்தால் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு முன் மொழியப்பட்ட 50 ருபாய் சம்பள அதிகரிப்பு உரிய நேரத்தில் கிடைத்திருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

50 ரூபாய் சம்பள அதிகரிப்பு இழுத்தடிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உரியவர்கள் அக்கறையுடன் நடவடிக்கை எடுக்க தவறியதால் இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் அமைச்சரவை பத்திரம் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு முன் மொழியப்பட்ட 50 ருபாய் சம்பள அதிகரிப்பு நிச்சயம் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கான குறித்த தொகை ஏற்கனவே வழங்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் பயங்கரவாத தாக்குதல்களினால் அரசாங்கம் நெருக்கடிகளை சந்தித்த நிலையில் அதை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தற்போது இலங்கையின் நிலைமை சீராகியுள்ளது. எனவே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ருபாய் சம்பள அதிகரிப்பு நிலுவையுடன் நிச்சயம் கிடைக்கபெறு என பிரதமர் மற்றும் அமைச்சர் நவீன திஸாநாயக்க ஆகியோர் உத்தரவாதமளித்துள்ளனர் என் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க