இலங்கையின் தேயிலைக்கான சர்வதேச சந்தை விலை குறைவடைந்து வருவதாக முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் லலித் ஒபேசேகர, இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“தரமான தேயிலை என்பது, ஏனைய தேயிலை ஏற்றுமதி நாடுகளது தேயிலைக்கான விலையை விட அதிகமானதாக இருக்கும். இலங்கையின் தேயிலை விலை கணிசமாக குறைவடைந்து வருகிறது.
இந்த வருடத்தின் ஜனவரி தொடக்கம் மே மாதம் வரையான காலப்பகுதியில் இலங்கை தேயிலையின் விலை 41 ரூபாய் 64 சதத்தால் வீழ்ச்சி அடைந்து, 574 ரூபாய் 90 சதமாக பதிவாகியுள்ளது.
இலங்கையை விட குறைந்த விலையில் தேயிலையைத் வழங்கும் நாடுகளிடம் சர்வதேச நாடுகள் செல்கின்றன” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க