உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்துக்கு பலத்த பாதுகாப்பு:நாளை திருவிழா

முல்லைத்தீவு மாவட்டத்தில் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் நாளைய தினம் இடம்பெற உள்ளது.

இந்நிலையில் குறித்த ஆலய பகுதியில் குடி கொண்டிருந்த பௌத்த துறவி சர்ச்சைக்குரிய விகாரை ஒன்றை நிறுவியுள்ள நிலையில் இன்று அவர் பிரித் ஓதும் நிகழ்வில் ஈடுபடுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் வருடாந்த உற்சவத்திற்கான அனுமதியை ஆலயத்தினர் பெற்ற நிலையில் எந்தவித குழப்பங்களும் பௌத்த மதகுரு உள்ளிட்டவர்களால் ஏற்படுத்தப்படாத வகையில் விசேட பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு இன்று பிரித் ஓதும் நிகழ்வுகளை நடத்துவதற்கு வந்த மக்கள் காவல்துறை வேண்டுகோளை அடுத்து கலைந்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் விசேட பொலிஸ் பாதுகாப்புடன் மிகவும் சிறப்பான முறையில் ஆலயத்தினுடைய பொங்கல் நிகழ்வுகள் ஏற்பாடு ஆகியிருக்கின்றது.

நாளை காலை 3 மணிக்கு கோட்டைகேணி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு ஆலயத்தில் நாளை மாலை வரை பூசை வழிபாடுகள் இடம்பெற இருக்கின்றது. எனவே இந்த பூஜை வழிபாடுகளில் பக்தர்களை வந்து பங்குகொள்ளுமாறு ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்

கருத்து தெரிவிக்க