தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலி அமைப்புக்கு ஆதரவாக 2009 ஆம் ஆண்டு பேசியதற்காக ம .தி. மு. க பொதுச் செயலாளர் வைக்கோவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், ரூ .10,000 அபராதமும் விதித்து சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான குற்ற வழக்குகளை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
2009 ஆம் ஆண்டில் இங்கு ஒரு புத்தகத்தை வெளியிட்டபோது ம .தி. மு. க பொதுச் செயலாளர் வைகோ தனது உரையில் இந்திய அரசாங்கத்தை கண்டித்துள்ளதோடு தமிழீழ விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த தண்டனைக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்ய பொது செயலாளர் வைகோவிற்கு அனுமதியும் ஒரு மாத கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க