மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதி வரை இந்த இடைக்கால தடை உத்தரவு வழங்குவதாக நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
பாரிய போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்து, அதன் முதற்கட்டமாக நான்கு பேருக்கு மரண தண்டனை வழங்க கைப்பொம் இட்டு இருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் நீதிமன்றத்தில் 12 தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்கள் உயர்நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதி வரை இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கருத்து தெரிவிக்க