உள்நாட்டு செய்திகள்புதியவை

பிரதமரின் கருத்துக்கு ஆசிரியர் சங்கம் மறுப்பு

தெற்காசியாவில் ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்த ஒரே நாடு இலங்கை மட்டுமே என்ற பிரதமரின் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கம் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிவிப்பில்,

நேற்று (ஜூலை 4) நடைபெற்ற ஒரு நிகழ்வில்பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்படி விடயத்தை கூறியுள்ளார்.

தகுதி இல்லாத 1,119 ஆசிரியர்களுக்கு வடமேற்கு மாகாணத்தில் கடந்த மாதம் நியமனங்கள் வழங்கப்பட்டதாக ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

2009 ல் போர் முடிவடைந்த நிலையில் குறித்த ஆசிரியர்கள் தானாக முன்வந்து பணியாற்றி வருவதாக உண்மைக்கு புறம்பாக தெரிவித்து இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.

அதேபோல சாதாரண தரத்தில் ஆறு பாடங்களில் மட்டுமே தேர்ச்சி பெற்ற 3880 பேர். இந்த ஆண்டில் விளையாட்டு பயிற்றுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் கல்வித்துறை நாட்டில் சிறப்பாக செயல்படுகிறது என்ற எண்ணத்தை உருவாக்குவதற்கான அரசாங்கம் செயற்பட்டு வருகிறது என ஆசிரியர் சங்க அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க