அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் 2020 ஆம் ஆண்டளவில் பெருந்தோட்ட பகுதிகளில் 10000 வீடுகள் தோட்டத் தொழிலாளர்களுக்காக அமைத்துக் கொள்ளப்படும் என பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
தோட்ட தொழிலாளர்களின் லயக்குடியிருப்பை மாற்றி அவர்களுக்கு தனியான வீடுகளை அமைத்து கொடுப்பதற்கு நாம் எடுத்த முயற்களுக்கு ஜனாதிபதி பிரதமர் ஆகியோர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளார்கள்.
மலையக மக்களின் சார்பில் நாம் இவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றோம் என்று மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் அமைச்சர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் இதனை கூறியுள்ளார்.
பதுளை, கேகாலை, மாத்தளை, கண்டி, மாத்தறை, இரத்தினபுரி, எட்டியாந்தோட்டை, தெனியாய போன்ற பிரதேசங்களிலும் இத்தனி வீட்டுத்திட்டத்தை மேற்கொண்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இது வரையிலும் 8000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும் 3000 வீடுகள் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மலையக குடிநீர் பிரச்சினை தொடர்பில் உலக வங்கியின் உதவியுடன் மக்களுக்கான சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுத்துள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.
மலையக மக்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் ‘டிகிரி சக்தி’ என்ற ஊட்டசத்து திட்டத்தையும் தொடங்கி வைத்துள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க