உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

மட்டக்களப்பு புதூர் சம்பவம் கைதானவர்கள் விபரம் அறிவிப்பு!

மட்டக்களப்பு புதூர் திமிலைதீவு பகுதியில் பொலிஸாரை தாக்கிய குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மட்டக்களப்பு திமிலைதீவைச் சேர்ந்த  23 வயதையுடைய நிம்மி என்கிற நிர்மலராஜ், அதே பகுதியை சேர்ந்த 19 வயதையுடைய சிவசங்கர் துசாந்தன், சேத்துகுடா பகுதியை சேர்ந்த 55 வயதையுடைய ராமையா லட்சுமணன் மற்றும் புதூரைச் சேர்ந்த 19 வயதையுடைய சிவானனதராஜா புருசோத்தமன் ஆகிய நால்வர் அடங்களாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட். தலைமையக பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள புதூர்  திமிலைதீவு ஆலயத்துக்கு அருகில் நேற்று வியாழக்கிழமை வீதி போக்குவரத்து பொலிஸார் இருவர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன்போது, இருவர்  தலைகவசம் இன்றி வவுணதீவு பிரதேசத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது பொலிஸார் அந்த மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்டனர்.

மோட்டர் சைக்கிளை செலுத்தி வந்தவர்கள் மோட்டர் சைக்கிளை திருப்ப முயன்ற போது வீதியின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படி ரக வாகனத்துடன் மோதுண்டு விபத்துக் குள்ளானதில் இருவரும் காயமடைந்தனர்.

இதனையடுத்து அங்கு ஒன்று திரண்ட பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல்நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது, பொலிஸ் உத்தியோகத்தரின் இடுப்பில் இருந்த கைதுப்பாக்கி ஒன்றை இனந்தெரியாத ஒருவர் எடுத்து தப்பி சென்றுள்ளார்.

இதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டதுடன் சம்பவத்தில் காயமடைந்த 2 பொலிஸார் உட்பட காயமடைந்த 6 பேர் மட். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாரும் விஷேட அதிரடிப்படையினரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதில், பெண்கள் உட்பட 9 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், புதூர் மற்றும் வவுணதீவு பகுதிகளில் இராணுவத்தினர் பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க