லண்டன்: பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் சாட்சிகளுக்கு நீரவ் மோடி கொலை மிரட்டல் விடுத்தார் என்று இந்திய தரப்பு லண்டன் நீதிமன்றத்தில் வாதம் செய்துள்ளது.
நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று நடந்த இந்த வழக்கில் காரசார விவாதம் நடந்தது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ12,700 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இவர் இதான் வழக்கு லண்டனில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
என்ன செய்தார்
இந்த வழக்கில் இந்தியா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் மிகவும் கடுமையான வாதங்களை வைத்தனர். அதில், நீரவ் மோடி இதுவரை வழக்கு விசாரணையில் ஒத்துழைக்கவில்லை. இந்தியாவில் இருந்து தப்பி வந்தவர்தான் அவர். அவருக்கு பெயில் வழங்க கூடாது. அவர் மீண்டும் எங்காவது தப்பி ஓடவே முயற்சி செய்வார்.
மிக மோசம்
ஏற்கனவே அவர் சில முறை ஆதாரங்களை அழித்து இருக்கிறார். தன்னுடைய ஆட்களை வைத்து ஆதாரங்களை அழித்துள்ளார். அதேபோல் அவரை வெளியேவிட்டால் அவர் ஆதாரங்களை அழிப்பதோடு சாட்சிகளை கொலை செய்யவும் வாய்ப்பு இருக்கிறது, ஏற்கனவே அவர் கொலை மிரட்டல் கூட விடுத்துள்ளார், என்று கூறினார்கள்.
செய்யவில்லை
ஆனால் நீரவ் மோடி தரப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதில், நீரவ் மோடி இந்தியாவில் இருந்து ஓடி வரவில்லை. அவர் அங்கு வழக்கு பதியும் முன்பே லண்டன் வந்துவிட்டார். லண்டனில் அவர் சுதந்திரமாகத்தான் இருந்தார். அவர் யாரையும் ஏமாற்றவில்லை.
இல்லை
லண்டன் வீதிகளில் அவர் வெளிப்படையாக உலா வந்தார். அவர் எங்கும் ஓடவில்லை என்று நீரவ் மோடி வழக்கறிஞர் குறிப்பிட்டார். ஆனால் நீதிபதிகள் இதை ஏற்கவில்லை. இதை ஏற்க மறுத்ததோடு நீதிபதிகள் நீரவ் மோடியின் ஜாமீனையும் மறுத்துவிட்டனர்.
கருத்து தெரிவிக்க