டாக்கா: வங்க தேசத்தில் முதல் குழந்தை பிறந்த 25 நாளில் மீண்டும் இரட்டை குழந்தைகளை ஒரு பெண் பெற்றுடுத்த சம்பவத்தால் மருத்துவர்கள் வியப்படைந்தனர்.
வங்க தேசத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஜெஸ்ஸோரே மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சுல்தானா(20). இவருக்கு பிப்ரவரி மாத இறுதியில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை மருத்துவர்கள் குறித்த காலத்துக்கு முன்பே பிறந்துவிட்டது.
இந்நிலையில 25 நாட்களுக்கு பிறகு கடந்த மார்ச் 22ம் தேதி சுல்தானாவுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை ஜெசோர் ஆத் தீன் மருத்துவமனைக்கு கொணடு சென்றனர்.
மருத்துவர்கள் பரிசோதனை
அங்கு சுல்தானாவை மருத்துவர் ஷீலா பொத்தார் பரிசோதனை செய்து பார்த்தார். அப்போது ஸ்கேன் பரிசோதனையும் செய்து பார்த்தார். அதில் சுல்தானாவுக்கு இரட்டை கர்ப்பப்பை இருப்பதை கண்டுபிடித்தார். ஏற்கனவே ஆண்குழந்தை பிறந்த நிலையில், மற்றொரு கர்ப்பப்பையில் இரட்டை குழந்தை இருப்பதையும் கண்டறிந்தார்.
இரட்டை குழந்தைகள்
இரட்டை குழந்தைகள் இதையடுத்து வியப்படைந்த மருத்துவர் ஷீலா பொத்தார், அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க முடிவு செய்தார். இதன்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டு உடனே அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது சுல்தானாவுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன.
தாயும் சேயும் நலம்
தாயும் சேயும் நலம் முதல் குழந்தை பிறந்த 25 நாளில் மீண்டும் இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்த பெண்ணை மருத்துவர்கள் நான்கு நாட்கள் சிகிச்சை அளித்து அவரை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். தாயும் குழந்தைகளும் தற்போது நலமுடன் இருக்கிறார்கள்.
மருத்துவர் பதில்
மருத்துவர் பதில் இரட்டை கர்ப்பப்பை ஒரு பெண்ணுக்கு இருப்பது அரிதான நிகழ்வாகும். இதுகுறித்து விளக்கம் அளித்த மருத்துவர் ஷீலா பொத்தார், அந்த பெண்ணுக்கு முதல் குழந்தை பிறந்த நிலையில், மற்றொரு கர்ப்பப்பையில் இரட்டை குழந்தைகள் இருப்பது முதலில் தெரியாது. தற்போது குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளன. எல்லாம் நன்றாக முடிந்துவிட்டது என்றார். இதனிடையே அந்த பெண் பிறக்கும் போதே இரட்டை கர்ப்பப்பையுடன் பிறந்திருக்கக்கூடும் என்றும், அதனால் தான் அவருக்கு இரட்டை கர்ப்பப்பை இருப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியாமல் இருந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
கருத்து தெரிவிக்க