அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளது.
கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
நெறிமுறையற்ற ஒப்பந்தங்களை அடுத்த 90 நாட்களுக்குள் அங்கீகரிக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது.
குறித்த ஓப்பந்தங்களை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்க அரசாங்கம் முற்படும் போது, ஒன்றிணைந்த எதிரணி அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க