கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது ஜூன் மாதத்தில் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் அதிகரித்துள்ளனர், ஆனால் அதே மாதத்திற்கான கடந்த ஆண்டு புள்ளிவிவரங்களிலிருந்து கடும் வீழ்ச்சியடைந்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்குக் பின்னர் இலங்கைக்கான பயணத்திற்கு பல நாடுகள் தடை விதித்திருந்தது. இதனால் கணிசமான அளவு சுற்றுலா வருகை வீழ்ச்சிக்கண்டது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நாட்டிற்கு விஜயம் செய்த 146,828 சுற்றுலாப் பயணிகளுடன் ஒப்பிடும்போது, ஜூன் மாதத்தில் மொத்த வருகையாளர்களின் எண்ணிக்கை 63,072 ஆக காணப்படுகின்றது.
இதன்படி கடந்த வருடத்தைக்காட்டிலும் பயணிகள் வருகை 57 சதவீதமாக குறைந்துள்ளது என்று இன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியா 15,048 ஆகவும், ஆஸ்திரேலியா 4,410 ஆகவும், இங்கிலாந்து 4,365 ஆகவும், சீனா 3,496 ஆகவும் உள்ளது.
கருத்து தெரிவிக்க