இந்திய பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்துள்ள நிலையில் அதன் தலைவர் ராகுல்காந்தி தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில் அதன் இடைக்கால தலைவராக 90 வயதான மோதிலால் வோரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் இடைக்கால தலைவராகியுள்ள மோதிலால் வோரா மத்திய பிரதேச முதலமைச்சராக இருந்தவர் ஆவார்.
தமது பதவியை ராஜினாமா செய்த நிலையில் ‘காங்கிரஸ் கட்சிக்கான புதிய தலைவரை விரைவில் தேர்ந்தெடுக்குமாறும் காங்கிரஸ் கட்சி கூட்டம் உடனடியாக கூட்டப்பட்டு காங்கிரஸ் தலைவர் தேர்ந்து எடுக்கப்படவேண்டும்’ எனவும் ராகுல்காந்தி முன்னதாக கூறியுள்ளார்.
கருத்து தெரிவிக்க