ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்வாறான விடுதலைகள் எதிர்காலத்தில் பாரிய ஆபத்துக்களை ஏற்படுத்தலாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புத்தளம், மஹவெவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நாடாளுமன்ற விஷேட தெரிவுக்குழு தொடர்பில் திருப்தியடைய முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் மக்கள் எதிர்வரும் தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு யாரை தெரிவு செய்வது என்பது தொடர்பில் சரியான தீர்மானம் ஒன்றிற்கு வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க