உள்நாட்டு செய்திகள்புதியவை

சீனி கலந்த பானங்களுக்கு மீண்டும் வரி

சீனி கலந்த பானங்களுக்கு மீண்டும் வரி விதிக்க அமைச்சரவை கவனம் செலுத்தியிருப்பதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சீனியுடனான பானத்திற்கு விதிக்கப்பட்டிருந்த வரியை 52 நாட்கள் நிலவிய அரசியல் நெருக்கடியின் போது நீக்குவதற்கு அப்போதைய பிரதமராக குறிப்பிடப்பட்டிருந்த மகிந்த ராஜபக்ஷ நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்.

இந்த விடயம் குறித்து நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. வரியை நீக்குவதன் மூலம் சீனியுடனான பான விற்பனை சந்தையில் இருந்து அகற்றப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பாக நிதி அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தொற்றா நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

6 கிராம் சீனியை கொண்டுள்ள பானங்களுக்கான வரியை விதிக்காது செயல்படுவதற்கும் அதற்கு அதிகமாக சீனி கலந்த பானங்களுக்கு வரி விதிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நிதி அமைச்சில் இடம்பெறவுள்ளது.

கருத்து தெரிவிக்க