மரண தண்டனையை அமல்படுத்துவதற்கான தீர்மானத்தை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு நாளை (ஜூலை 4) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள் யசந்த கோட்டகொட, அர்ஜுன ஒபியசேகர, தீபாலி விஜேசுந்தர, ஜனக் டி சில்வா, அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட நீதிபதிகள் குழு இதனை அறிவித்தது.
மரண தண்டனை நிறைவேற்றத்தை நிறுத்தும் சிறைச்சாலை ஆணையாளரின் வலியுறுத்தலை அமுல்படுத்த கோருவதாகவும் குறித்த மனு ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிரானது அல்ல எனவும் இதன் போது மனுதாரரின் சட்டத்தரணி நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளார்.
மரண தண்டனையை அமல்படுத்துவதை இடைநிறுத்த இடைக்கால உத்தரவு கோரி ஊடகவியலாளர் மலிந்த செனவிரத்ன மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவுக்கு பொறுப்பேற்பவர்களாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மற்றும் வெலிக்கடை சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
கருத்து தெரிவிக்க