ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாஷவே களமிறக்கப்படுவார் என அமைச்சர் மங்கள சமரவீர உறுதியாக தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு நேற்று வழங்கியிருந்த விஷேட செவ்வியில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
கடந்த 25 வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஜனாதிபதியொருவர் தெரிவாகவில்லை. இதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சி நிர்க்கதியாகியுள்ளது. கடந்த 5 வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி காணப்பட்டாலும், தொகுதி ரீதியிலான பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு வழங்க முடியாமற்போயுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக களமிறக்கப்படுபவர் வேட்பாளராக இருந்தால் மாத்திரம் போதாது வெற்றியடையக் கூடியவராகவும் இருக்க வேண்டும். அந்த விதத்தில் சஜித் பிரேமதாஷவிடமே பிரபலத்தன்மை காணப்படுகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், சஜித் பிரேமதாஷவுக்கு உள்ள ஆதரவின்படி, எவர் வந்தாலும் எவ்வித பிரச்சினையும் இல்லை. சஜித் பிரேமதாசவை எவ்வாறு வெற்றியடைச் செய்வது என்பதை நாம் அறிவோம். எனினும், ரணில் விக்ரமசிங்க, டீ.எஸ் சேனாநாயக்க ஆகியோரின் செயற்பாடுகளை எம்மால் முன்னெடுக்கக்கூடியதாக இருக்க வேண்டும் எனவும் மங்கள சமரவீர தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க