அரசாங்கத்தை பதவி விலகக் கோரி அழுத்தத்தைக் கொடுக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று எம்பிலிப்பிட்டிய நகரில் நேற்று இடம்பெற்றுள்ளது.
நாட்டை நிலைகுலையச் செய்த மக்கள் பாதுகாப்பை பறி கொடுக்கின்ற அரசாங்கமே உடனடியாக பதவி விலகு என்ற தொனிப்பொருளில் குறித்த போராட்டம் நாடெங்கிலும் நடைபெற்று வருகின்றது.
துறைமுகம்,எண்ணெய் குதங்கள், காணி, உள்ளிட்ட தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு பறி கொடுக்கின்ற அரசாங்கமே உடனடியாக பதவி விலக வேண்டுமென குறித்த கட்சி அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றது.
பொறுப்பற்ற ரணில்- மைத்திரி ஊழல் அரசாங்கம் மேலும் இந்நாட்டை ஆட்சி செய்ய தகுதி அற்றவர்கள் என மக்கள் விடுதலை முன்னணி கட்சி தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இப் பாரிய போராட்டத்திலும் மக்கள் கூட்டத்திலும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய விஜித ஹேரத் கலந்துகொண்டுள்ளார்.
மேலும் மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியக்குழு உறுப்பினரும் ஊவா மாகாணசபை உறுப்பினருமாகிய சமந்த வித்தியாரத்ன மக்கள் விடுதலை முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட தலைவர் சாந்த பத்மகுமார மற்றும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
கருத்து தெரிவிக்க